பாலம் உடைந்து பள்ளத்தில் செங்குத்தாக சிக்கிய லாரி


பாலம் உடைந்து பள்ளத்தில் செங்குத்தாக சிக்கிய லாரி
x
தினத்தந்தி 9 Feb 2022 6:07 PM IST (Updated: 9 Feb 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே பாலம் உடைந்து லாரி பள்ளத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரை

திருமங்கலம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. பழைய பாலம் என்பதால் இந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்ல வேண்டாம் என்று நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை பலகை வைத்திருந்தது.

ஆனால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மணல் கிராவல் குவாரிக்கு சொந்தமான லாரிகள் இதனை மதிக்காமல் பயணித்து வந்தனர்.   

இந்த நிலையில் குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று பாலத்தின் மீது செல்லும் போது பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது விழுந்த பள்ளதில் லாரி செங்குத்தாக  சிக்கிக் கொண்டது. சுதாரித்து கொண்டு லாரியின் டிரைவர்  உயிர் தப்பிவிட்டார். 

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


Next Story