“நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓய மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓய மாட்டோம் என திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், இன்று கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கு உதாரணமாக கூறும் அளவிற்கு தமிழகம் சிம்மசொப்பனமாக இருப்பதாக தெரிவித்தார்.
திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்த அவர், ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதங்களில் திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். மேலும், “நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். அதற்கான எல்லா விதமான சட்ட போராட்டங்களையும் செய்வோம்” என்று தெரிவித்த அவர், மக்களவையில், “தமிழகத்தை பார்த்து பிரதமர் மோடி திருந்த வேண்டும். பாஜகவால் ஒருநாளும் தமிழகத்தை ஆள முடியாது” என ராகுல் காந்தி பேசியதையும் சுட்டிக்காட்டினார்.
Related Tags :
Next Story