பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 3 டிரைவர்கள் பலி
பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 3 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை,
தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி, மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் சத்தியபுரம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை சென்றது. அப்போது திடீரென பழுதாகி சாலையில் நின்றது.
இதனால் அந்த லாரியை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் மந்திரமூர்த்தி(வயது 50), அவருடன் வந்த மாற்று டிரைவர் சண்முகசுந்தரம்(60) ஆகிய இருவரும் லாரியின் அடிப்பகுதிக்கு சென்று பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.
3 பேர் பலி
அப்போது சிவகாசியில் இருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு அந்த வழியாக மற்றொரு லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக பழுதாகி சாலையில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பட்டாசு ஏற்றிவந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பட்டாசு லாரி டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த வரதராஜன்(37) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பழுதான லாரியின் அடியில் இருந்து, பழுதை சரிசெய்து கொண்டிருந்த டிரைவர் மந்திரமூர்த்தியும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.
படுகாயம் அடைந்த மாற்று டிரைவர் சண்முகசுந்தரம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

Related Tags :
Next Story