பிரபல ஜவுளிக்கடையில் ரூ 1 70 லட்சம் கொள்ளை
புதுச்சேரி நேருவீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நேருவீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை
புதுச்சேரி நேருவீதியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. 3 தளங்கள் கொண்ட இந்த கடையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் வழக்கம்போல் திறந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
ஜவுளிக்கடையின் மொட்டை மாடிக்கு சென்ற மர்மநபர்கள், ‘லிப்டின்’ கேட்டை விலக்கி நைசாக உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஜவுளிக்கடையின் மேலாளர் செந்தில்குமார் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர
Related Tags :
Next Story