தேசிய, மாநில அரசியல் தலைவர்களின் பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறவேண்டும்


தேசிய, மாநில அரசியல் தலைவர்களின் பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறவேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:58 AM IST (Updated: 10 Feb 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

தேசிய, மாநில அரசியல் தலைவர்களின் பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறவேண்டும் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும், ஒலிபெருக்கிகளுடன் கூடிய வாகனங்களை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், வாகனங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி கடிதத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டரின் அனுமதி பெறப்பட வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல், தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் தேர்தல் பிரசார வாகனங்களுக்கான அனுமதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் வாகன அனுமதியினை வாகனத்தின் முன்புற கண்ணாடி மீது நன்கு தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். இந்த வாகனங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story