உயிரிக்கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் எரிபொருள் உற்பத்தி ஆய்வுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகள்
உயிரிக்கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் எரிபொருள் உற்பத்தி ஆய்வுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகள் சென்னை ஐ.ஐ.டி. புதிய முயற்சி.
சென்னை,
பெட்ரோலிய பொருட்களால் உருவாக்கப்படும் எரிபொருள் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உயிரிக்கழிவு எரிபொருள் நடைமுறைத் தீர்வாக இருக்கிறது. உயிரிக்கழிவுகளில் இருந்து எரிபொருள் உருவாக்குவது இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது. இதன் மூலம் நாடு தற்சார்பு அடையும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் உயிரிக்கழிவுகளை வாயு சார்ந்த எரிபொருளாக மாற்றும் நடைமுறைகள் தொடர்பான ஆய்வுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகளை புதிய முயற்சியாக சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இந்த ஆய்வுக் குழுவுக்கு சென்னை ஐ.ஐ.டி. வேதிப் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் ஹிமான்ஷூ கோயலும், பேராசிரியர் நிகேத் எஸ்.கைசரேயும் தலைமை தாங்குகின்றனர். இதில் சென்னை ஐ.ஐ.டி.யின் கணினி அறிவியல் இளநிலை பட்டதாரி கிருஷ்ணா கோபால் சர்மாவும் உள்ளார்.
இந்த குழுவினர் உயிரிக்கழிவுகளை எரிபொருளாக மாற்றும் ஆய்வுக்கு மட்டுமின்றி, சமூக ரீதியாக தேவைப்படுகின்ற, சுற்றுச்சூழலுக்கு பயன்தருகின்ற கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது, ரசாயன தொழில் துறையின் மின்மயம் ஆகியவற்றுக்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story