சத்தம் போட்டு திட்டியதால், ஆத்திரத்தில் மனைவியை வெட்டிய கணவன் கைது


சத்தம் போட்டு திட்டியதால், ஆத்திரத்தில் மனைவியை வெட்டிய கணவன் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 10:43 AM IST (Updated: 10 Feb 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே மது குடித்ததை சத்தம் போட்டு திட்டியதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வகுமார்(வயது 43). இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவரை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார்.

மது பழக்கத்தை விடும்படி மனைவி அமுதா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.  

இந்த நிலையில் சம்பவத்தன்று  மனைவி அமுதா வெளியே கேட்கும் படி சத்தம் போட்டு செல்வகுமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மனைவி அமுதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார் 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

இந்த சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு  செய்து செல்வகுமாரை கைது செய்துள்ளனர். 


  

Next Story