ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைப்பு


ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 10:49 AM IST (Updated: 10 Feb 2022 10:49 AM IST)
t-max-icont-min-icon

ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சராக இருந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 5.12.2016 அன்று மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி விசாரணை நடத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து 25.9.2017 அன்று அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மருத்துவக்குழுவை எய்ம்ஸ் இன்று அமைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவுடன், ஆறுமுகசாமி வருகிற 16ம் தேதி ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளன.!

Next Story