பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம்


பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம்
x
தினத்தந்தி 10 Feb 2022 11:14 AM IST (Updated: 10 Feb 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

சென்னை,

சென்னையில்  தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டனர்.  முன்னதாக அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.  3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், அலுவலகத்தின் தரை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.  இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர், கர்த்தா வினோத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நமக்கு கோவிலாக இருக்கும் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம்!  இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக காவல்துறை அடக்க வேண்டும்.

இது போன்ற செயலால் பாஜக தொண்டர்கள் தளர்வு கொள்ளமாட்டார்கள் வெற்றியை நோக்கி நாம் பயணிப்போம்.! என்று தெரிவித்துள்ளார்.

Next Story