தையல் கடையில் தீவிபத்து -15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
மன்னார்குடி அருகே தையல் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன்(வயது 55). இவர் மன்னார்குடி பெரிய கடை தெருவில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கடையில் பின்புறத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணை முயன்றனர். தீ வேகமாக பரவியதால் நீடாமங்கலம்,கோட்டூர் பகுதியில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைத்தனர். பின்னர் 3 தீயை அணைப்பு வண்டிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் மற்றம் துணிகள் தீயில் கரிரு நாதமானது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மான்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story