தமிழகத்தில் தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story