தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு பதில்


தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு பதில்
x
தினத்தந்தி 10 Feb 2022 1:33 PM IST (Updated: 10 Feb 2022 1:33 PM IST)
t-max-icont-min-icon

கேதர்நாத்தில் ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவின்போது பேசிய பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

கேதர்நாத்தில் ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியது தமிழகத்தில் 16 கோவில்களில் ஒளிபரப்பானது.

இந்நிலையில்,பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவிலில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,மத்திய அரசின் உத்தரவின்படியே கோயிவில்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பப்பட்டதாகவும்,தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்,அது அரசியல் நிகழ்வு அல்ல.மாறாக ஆன்மீக நிகழ்வுதான் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்று,பிரதமர் உரையின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிய சென்னை  ஐகோர்ட்டு கோவில்களில் மதம் சாராத நிகழ்வுகளை ஒளிபரப்ப தடை கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Next Story