நெல்லையில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்
நெல்லையில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை நெல்லை சரக டி.ஐ.ஜி. காவலர்களுக்கு வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் ரோந்து பணிகளுக்கு செல்லும் காவலர்களுக்கு உடையில் அணியும் நவீன கேமராக்கள், குரல் பதிவு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மெகா ஃபோன், டார்ச் லைட், உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடக்க விழா நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கலந்து கொண்டு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை காவலர்களுக்கு வழங்கி, ரோந்து பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story