பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சென்னை ,
பா.ஜனதா மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சிற்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இச்சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story