சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேர்தல் பறக்கும் படையினர்...!


சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேர்தல் பறக்கும் படையினர்...!
x
தினத்தந்தி 10 Feb 2022 8:16 PM IST (Updated: 10 Feb 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை தேர்தல் பறக்கும் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கம்புகுத்தியூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). லாரி டிரைவர். இவர் இன்று மாலை குஜிலியம்பாறை பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். 

இதில் செல்வத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வேறு ஊர் சென்றதால் செல்வத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள் அவ்வழியாக வாகனத்தில் வந்தனர். சாலை விபத்து நடந்திருப்பதை அறிந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தங்கள் வாகனத்தை விட்டு உடனடியாக இறங்கி படுகாயமடைந்த செல்வத்திற்கு உதவினர். 

மேலும், உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த செல்வத்தை மீட்ட பறக்கும்படை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றி குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தங்கள் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

Next Story