வழிப்பறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
காப்புக்காடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் காப்புக்காடு பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி கொள்ளையர்கள் வழிப்பறித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் நாளுக்க நாள் அதிகரித்து வருகின்றது. இந்தகைய வழிப்பறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தை பொது மக்கள் முற்றுயையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர் வழிப்பறி கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவு அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story