தமிழில் வணக்கம் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கின்றனர்- பிரதமர் மோடி மீது மு.க ஸ்டாலின் விமர்சனம்
தமிழில் வணக்கம் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் நினைக்கிறார் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரியில் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மு.க ஸ்டாலின் தனது பிரசாரத்தில் பேசியதாவது; -
தமிழில் வணக்கம் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் நினைக்கிறார். தமிழக மக்களை எப்போதும், யாராலும் ஏமாற்ற முடியாது. ஏமாறவும் மாட்டார்கள். கூட்டாட்சி தத்துவம் பற்றி ராகுல் காந்தி கூறியது ஏன் பிரதமருக்கு கசக்கிறது?” என்றார்.
Related Tags :
Next Story