வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு


வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:42 AM IST (Updated: 12 Feb 2022 10:42 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சார்லஸ். இவரது மகள் ஹேமா (வயது 4). இவர்களது வீட்டில் கடந்த மாதம் 21-ந் தேதி குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளனர். அப்போது வீட்டில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஹேமா சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை ஹேமா பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story