பள்ளத்தில் விழுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்


பள்ளத்தில் விழுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்
x
தினத்தந்தி 12 Feb 2022 11:33 AM IST (Updated: 12 Feb 2022 11:33 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

ஈரோடு,

கோபி- ஈரோடு சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.  இதே போன்று கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராத விதமாக பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story