செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
கோயம்பேடு அருகே செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போரூர்,
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த காசிநாதன் மகள் குணவதி (வயது17). குணவதி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய குணவதி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது தாய் அமுதா கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த குணவதி திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story