திடீர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் சம்பா பயிர்களின் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் 2 நாட்களாக தொடர்ந்து நீடிக்கும் மழையால் அறுவடைக்கு தாயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்சி சேதம் அடைந்து வருகின்றது. இதே போன்று அறுவடை செய்து வயலில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் திடீர் திடீரென பெய்து வரும் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது அறுவடை பணிகள் தீவிரமடைந்த நிலையில் திடீரென பெய்த மழையால் ஏராளமான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
மேலும் அறுவடை செய்து வைக்கப்பட்ட நெல் மணிகளும் மழை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவற்றை உலரவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த மழையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
Related Tags :
Next Story