தி மு க ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க 100 சதவீத வெற்றிபெறும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி


தி மு க  ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க 100 சதவீத வெற்றிபெறும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2022 9:11 PM IST (Updated: 12 Feb 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

புதுச்சேரி
தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். 
இதற்காக கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த ஓ.பன்னீர்செல்வம் 100 அடி ரோட்டில் உள்ள சன்வே ஓட்டலில் ஓய்வெடுத்தார். அப்போது  அவரை புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் கடலூருக்கு புறப்படும்போது ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு அதிருப்தி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நிற்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100-க்கு 100 மாபெரும் வெற்றியை பெறும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
புதுவையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடருகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார்.
===

Next Story