திமுக பிரமுகர் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்


திமுக பிரமுகர் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்
x
தினத்தந்தி 13 Feb 2022 12:14 AM IST (Updated: 13 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்

தி.மு.க. பிரமுகர் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்?  என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
வெடிகுண்டு வீச்சு
புதுவை உப்பளம் நேத்தாஜி நகர்-2 அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்க்ளின்    (வயது 59).  பொதுப் பணித்துறை காண்டிராக்டர் ஆன இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் பிராங்க்ளின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன்      வெடித்து சிதறின.
போலீசார் விசாரணை
அப்போது பிராங்க்ளின் வீட்டில் இல்லை. அவரது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்கள் வெடிகுண்டு வெடித்த    சத்தம்  கேட்டு அலறினார்கள். அதேநேரத்தில் வீட்டிற்கு வெளியே வெடிகுண்டுகள் வெடித்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு கிடந்த வெடிகுண்டு சிதறல்களையும் ஆய்வுக்காக சேகரித்து சென்றனர்.
குண்டு வீசியது ஏன்?
இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற சதீஷ் (வயது 23) குண்டு வீசியது    தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே பிராங்க்ளின் ஒதியஞ்சாலை போலீசில்    கொடுத்த  புகாரில், உறவினரான சதீஷ் குடும்பத்துக்கு பண உதவி செய்ததில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும் இந்த தகராறில் வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
அதாவது பிராங்க்ளின் உதவி செய்து வந்த நிலையில் வேலைக்காக   வெளிநாடு செல்ல சதீஷ்க்கு தேவையான ஏற்பாடுகளை    செய்யாத ஆத்திரத்தில் அவர் வெடிகுண்டு வீசியது தெரியவந்துள்ளது.
குடும்ப விவகாரம்
குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கு பிராங்க்ளினிடம் இருந்து பண உதவி கிடைக்காத நிலையில் இந்த சம்பவத்தில் சதீஷ் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  குடும்ப விவகாரத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story