ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்


ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:47 PM IST (Updated: 13 Feb 2022 2:47 PM IST)
t-max-icont-min-icon

கடிதங்கள் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம். 

வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்து விட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது. தனுஷ்கோடி அருகே மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க செய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story