கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தது திமுக தான்: பிரசாரத்தில் முதல்வர் பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2022 7:11 PM IST (Updated: 13 Feb 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல விதமாக பிரசாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது பேசியதாவது;

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக முழுமையான வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் மலையளவு ஊழல் அரங்கேறியுள்ளது. சட்டம், ஒழுங்கு சரியில்லாத ஆட்சியை நடத்திய ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோருக்கு திமுக-வின் அரசை பற்றி பேச தகுதி கிடையாது. கடந்த ஆட்சியின்போது, திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதால் அதிமுக உள்ளாட்சித்தேர்தலை நடத்தவில்லை. 

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தது திமுக அரசு தான். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.


Next Story