மாநில சுயாட்சியை உறுதிபடுத்த திமுக துணை நிற்கும்: முதல்வர் டுவீட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2022 8:13 PM IST (Updated: 13 Feb 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியின் வாயிலான பேசியுள்ளார்.

சென்னை, 

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபையை கவர்னர் கலைத்தது தொடர்பாக கவர்னருக்கும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியின் வாயிலான பேசியுள்ளார். அப்போது அவர், பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களில் கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சி முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிபடுத்த திமுக துணை நிற்கும்  என உறுதியளித்துள்ளார். மேலும், எதிர்கட்சி முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.


Next Story