ஸ்டூடியோவில் ரூ 1 லட்சம் பொருட்கள் திருட்டு
வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்டூடியோவில் ரூ.1 லட்சம் பொருட்களை திருடி சென்ற முகமூடி அணிந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்டூடியோவில் ரூ.1 லட்சம் பொருட்களை திருடி சென்ற முகமூடி அணிந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.1 லட்சம் பொருட்கள்
திருட்டு
வில்லியனூர் அருகே சிவராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜ்குமார் (வயது 31). இவர் வில்லியனூர் மேற்கு மாட வீதியில் ஸ்டூடியோ கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டூடியோவை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை திறக்கவந்தபோது, ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஸ்டூடியோவுக்குள் சென்று பார்த்தபோது, டி.வி., ஜாய்ஸ்டிக் வீடியோ பிளேயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
மேலும் ஸ்டூடியோவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் ஸ்டூடியோவில் புகுந்து திருடுவது போல் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. அது திருட்டு நடந்த ஸ்டூடியோவில் இருந்து சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட முக மூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு நடந்த ஸ்டூடியோ வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story