‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி ஒலிபரப்பாகிறது.
இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த மாதத்தின் ‘மனதின் குரல்' நிகழ்ச்சி பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும். எப்போதும் போல், அதற்கான உங்கள் ஆலோசனைகளைப் பெற ஆவலாக உள்ளேன். அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிரவும். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்தும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story