மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 69). இவர், ரெயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய மூத்த மகன், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த பார்த்தசாரதி, அதன்பிறகு தினமும் மது அருந்தி வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு படுக்கை அறைக்குள் சென்ற பார்த்தசாரதி, அங்குள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை அவருடைய 2-வது மகன் அரவிந்த், தனது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் ஆவடி புதிய கண்ணியம்மன் நகர் 11-வது தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (30). இவர், கடனுக்கு மினிவேன் வாங்கி, அதை வைத்து அப்பகுதியில் தண்ணீர் ேகன் வினியோகம் செய்து வந்தார்.
ஆனால் அதில் சரியான வருமானம் கிடைக்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த வரதராஜன், நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story