சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில்கள் 100 சதவீதம் இயக்கம்


சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில்கள் 100 சதவீதம் இயக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2022 8:36 AM IST (Updated: 14 Feb 2022 8:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில்கள் 100 சதவீதம் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் மின்சார ரெயில் சேவை கடந்த சில மாதங்களாக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் சென்னையில் இன்று முதல் மீண்டும் மின்சார ரெயில் சேவை முழு அளவில் 100 சதவீதம் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று முதல் வார நாட்களில் 658 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story