தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
தமிழகத்தில் மேலும் 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு இறங்கு முகம் கண்டு வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,634- ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் மேலும் 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,365- பேர் குணம் அடைந்துள்ளனர். கவலை அளிக்கும் விதமாக தொற்று பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்து 750- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 341- பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story