வானத்தில் ஒளியை பீய்ச்சி பறந்து சென்ற மர்ம பொருள்
குறைந்த உயரத்திலேயே சென்றுள்ளது. அதில் இருந்து வெளிவந்த ஒளி நீண்ட தூரத்திற்கு தெரிந்தது.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 34). இவர் காரியாண்டியில் கடை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்குள்ள ரோட்டு ஓரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் திடீரென ஒரு மர்ம பொருள் அதிக வெளிச்சத்துடன் இருளில் ஒளியை பீய்ச்சி அடித்துக்கொண்டு பறந்து சென்றது. ஆனால், அதிலிருந்து சத்தம் எதுவும் வரவில்லை. நட்சத்திரம் போன்றும் காணப்படவில்லை. குறைந்த உயரத்திலேயே சென்றுள்ளது. அதில் இருந்து வெளிவந்த ஒளி நீண்ட தூரத்திற்கு தெரிந்தது.
இதனால் வியப்படைந்த அவர் அதை உடனடியாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை அறிந்த பொதுமக்கள் பறந்து சென்ற மர்ம பொருள் குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டனர். அது என்னவென்று தெரியாமல் வியப்படைந்து நீ்ண்டநேரம் விவாதித்தனர்.
Related Tags :
Next Story