உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளலாம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான http://tnsec.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர் எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதே இணையதளத்தில், ‘உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story