மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது விபத்து - ஒருவர் உயிரிழப்பு - வீடியோ


மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது விபத்து - ஒருவர் உயிரிழப்பு - வீடியோ
x
தினத்தந்தி 15 Feb 2022 1:28 PM IST (Updated: 15 Feb 2022 2:08 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் பிரவீன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிது வந்துள்ளார்.

இந்நிலையில், பிரவீன் இன்று தனது வீட்டில் வெடி தயாரித்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஏற்பட்டது. வெடி மருந்து திடீரென வெடித்ததில் வெடி தயாரித்துக்கொண்டிருந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

வெடி தயாரிக்கப்பட்ட வீடும் இடிந்து தரைமட்டமானது. வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம்பக்கத்தில் இருந்த 3-க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தில் 9 மாத குழந்தை மற்றும் தாய் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புப்படையினர் மற்றும் போலீசார் படுகாயமடைந்த குழந்தை மற்றும் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story