பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராகிம் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு


பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராகிம் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 15 Feb 2022 3:25 PM IST (Updated: 15 Feb 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராகிம் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்ததாக கூறி தாக்கல் செய்த மனுவை 10,000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராகிம், கோவை 95 வது வார்டில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்யவிடாமல் போலீசார் தடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். 

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் டி.பாரத்சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இம்மனுவை விசாரித்தனர். இதில் பதட்டமான பகுதியில் பரப்புரை செய்ய வேண்டாம் என போலீசார் கூறியதை மீறி அங்கு பரப்புரை செய்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு விவரங்களை மனுதாரர் தான் நீதிமன்றத்தில் தொடுத்த மனுவில் தெரிவிக்கவில்லை. 

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி 10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும்  தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்திடம் 15 நாட்களுக்குள் அபராத தொகை ரூ.10,000 -த்தை செலுத்த வேண்டும்  என உத்தரவில் தெரிவித்தார்.


Next Story