உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்


உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:19 AM IST (Updated: 16 Feb 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது.

மதுரை,

தமிழகத்தில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் நிராகரிக்கப்பட்டவை, வேட்பாளர்கள் தகுதி நீக்கம், குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கீடு செய்ய கோருவது என ஏராளமான வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில், அதன் எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது நிர்வாக ரீதியான உத்தரவின் அடிப்படையில், தேர்தல் சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்விற்கு மாற்றப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story