நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
x
தினத்தந்தி 16 Feb 2022 9:19 AM GMT (Updated: 2022-02-16T14:49:40+05:30)

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் முன்னேர்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் அணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ககந்தீப்சிங் பேடி, சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், தொழில்நுட்பப்பிரிவு ஐ.ஜி. மகேஷ்வரி, ஏ.டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாவட்ட கலெக்டர் டாக்டர் விஜயராணி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story