பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து


பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து
x
தினத்தந்தி 16 Feb 2022 7:09 PM IST (Updated: 16 Feb 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

சென்னை,

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு தானே எழுதிப் பாடிய 'பீப் சாங்' என்கிற பாடல் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்ததுடன் சிம்பு மீது சில அமைப்புகள் வழக்குத் தொடுத்தனர். அதில் கோவை காவல்துறை பதிந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு. கோவை நீதிபதி விசாரணை அடிப்படையில் புகாரில் போதுமான ஆதாரமில்லை என வழக்கை ரத்து செய்தார்.

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக  விமர்சிக்கும் வகையில்  பீப் பாடல் வெளியானது.  சிம்பு, அனிருத்துக்கு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்தார்.  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. 

Next Story