திமுகவிற்கு உருவாக்கத்தான் தெரியும்; அதிமுகவிற்கு அழிக்கத்தான் தெரியும் - மு.க.ஸ்டாலின்


திமுகவிற்கு உருவாக்கத்தான் தெரியும்; அதிமுகவிற்கு அழிக்கத்தான் தெரியும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Feb 2022 7:21 PM IST (Updated: 16 Feb 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

திமுகவிற்கு உருவாக்கத்தான் தெரியும்; ஆனால் அதிமுகவிற்கு அழிக்கத்தான் தெரியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆங்கிலேயர்கள் வந்து இறங்கியது திருவள்ளூர் மாவட்டம் தான்​. திருவள்ளூர் மாவட்டத்தை நவீன மாவட்டமாக மாற்றியது திமுக அரசு தான்.  திமுக ஆட்சியில் தான் ஸ்ரீபெரும்புதூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது.

திமுகவிற்கு உருவாக்கத்தான் தெரியும்; ஆனால் அதிமுகவிற்கு அழிக்கத்தான் தெரியும். இப்படி முடக்கி வைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கியவர்களை இன்று மக்களே முடக்கி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இருக்கிறது. நாம் இன்று செய்யும் சாதனைகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கப் போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story