கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் இன்று நடந்தது.அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை(வியாழக்கிழமை) மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது.
கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் இன்று நடந்தது.அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை(வியாழக்கிழமை) மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது.
மாசி மக பிரம்மோற்சவம்
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலில் காமாட்சி, மீனாட்சி சமேதராக சாமி அருள் பாலிக்கிறார். நதியின் வடக்கு பகுதியில் காசிவிசுவநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவு சாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக காலையில் சாமி-அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் வழிபாடு நடந்தது.பின்னர் சாமி-அம்மன் தேரில் எழுந்தருளினர்.
விழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கலந்து கொண்டு காலை 9.30 மணி அளவில் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் திருப்பணிக்குழு தலைவர் செல்வம், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய தணிக்கை அதிகாரி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
நாளை தீர்த்தவாரி
தொடர்ந்து விழாவின் நிறைவாக மாசிமக தீர்த்தவாரி நாளை (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. அதனையொட்டி
மாசி மக நட்சத்திரத்தை முன்னிட்டு இங்குள்ள சங்கராபரணி நதிக்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும். மேலும் பித்ரு தோஷம் நீங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் சங்கராபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சங்கராபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்யும் மேடைகளையும் இடத்தையும் மாவட்ட துணை கலெக்டர் ரிஷிதா குப்தா,தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு (மேற்கு) ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story