புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 11:52 PM IST (Updated: 16 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் இன்று  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர்களில் 34 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 702 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 217 பேர் குணமடைந்தனர். இன்று புதியதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவையில் தொற்று பரவல் 2.63 சதவீதமாகவும், குணமடைவது 98.37 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 240 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 707 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 137 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 58 ஆயிரத்து 849 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story