சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்தது. எனினும் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 68,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story