தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!


தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!
x
தினத்தந்தி 17 Feb 2022 12:41 PM IST (Updated: 17 Feb 2022 12:41 PM IST)
t-max-icont-min-icon

தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (17.02.2022) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மேலும் நாளையும் (18.02.2022) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 6, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5, சிற்றாறு (கன்னியாகுமரி) 4, சுருளக்கோடு (கன்னியாகுமரி) 3, தக்கலை (கன்னியாகுமரி) 2, களியல் (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), குழித்துறை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), ஆய்க்குடி (தென்காசி) தலா 1.

மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story