வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் - அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்


வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் - அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Feb 2022 1:37 PM IST (Updated: 17 Feb 2022 1:37 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியில் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவை அதிமுகவினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்

 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

Next Story