மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது - புதிய சட்ட திருத்தம்
சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை போலீசார் விசாரணை செய்யலாம் என புதிய சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
மூன்றாம் பாலினத்தவரை (திருநங்கைகளை) விசாரணை என்ற பெயரில் தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகள் தொடர்பான நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை போலீசார் விசாரணை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் செல்போன் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணை என்கிற பெயரில் திருநங்கைக்கு போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக காவல்துறையில் புதிய விதி சேர்க்கப்பட்டிருப்பது திருநங்கைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Related Tags :
Next Story