தமிழகத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், அதுகுறித்து தமிழக அரசுடன் பேச தேசிய அணுமின்கழகத் தலைவர் புவன் சந்திரபதக் அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரிகிறது. கூடங்குளம் அணுக்கழிவு பாதாள கட்டமைப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும், பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதுதான் அவரது பயணத்தின் நோக்கமாகும். இது தொடர்பான அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணியக்கூடாது. கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதாள கட்டமைப்பை ஏற்படுத்தினால், அது தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பா.ம.க. தான். அதன் பின்னர் அணுக்கழிவு கட்டமைப்புக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. கூடங்குளம் அணு உலையைவிட தமிழக மக்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முக்கியமாகும். அதில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது. தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story