சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து-10 பேர் படுகாயம்


சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து-10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Feb 2022 3:12 AM IST (Updated: 18 Feb 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையிலிருந்து சூளகிரி நோக்கி  25 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றது. பஸ்யை சூளகிரியை சேர்ந்த கார்த்திக்(24) என்பவர் ஓட்டிவந்தார்.

பேருந்து அத்திமுகம் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. 

இதனால் பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தால் அந்த சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story