வயலில் கசிந்த எண்ணெய்; ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பா...? அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் அருகே வயலில் எண்ணெய் படலம் காணப்பட்டதால் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூரைச் சேர்ந்த விவசாயி நடராஜன். இவரது விளை நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடை பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் தனது வயலுக்கு இன்று காலை நடராஜன் சென்ற போது வயலில் எண்ணெய் படலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வயலின் கீழ் செல்லும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்று வாருவாய்த் துறை மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்குடி ஓ.என்.ஜி.சி தலைமை அதிகரிகள் எண்ணெய் படலம் இருந்த வயலை ஆய்வு செய்தனர்.
இதுபோல மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
வயலுக்கு கீழ் செல்லும் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டிருந்தால் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். ஆனால் அது போல் இல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எண்ணெய் படலம் காணப்படுகின்றது.
இந்த கசிவு எதனால் ஏற்ப்பட்டது என்று ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகின்றது. தற்போது இந்த படலத்தில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்வு முடிவுகளின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளை நிலத்தில் எண்ணெய் கசிந்ததால் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story