தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா- அதிமுக எம்எல்ஏ சாலை மறியல்- வீடியோ


தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா- அதிமுக எம்எல்ஏ சாலை மறியல்- வீடியோ
x
தினத்தந்தி 18 Feb 2022 11:56 AM IST (Updated: 18 Feb 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக குறி எம்.எல்.ஏ அய்யப்பன் தலைமையில் அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி

தமிழகத்தில் நாளை  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற  உள்ள நிலையில் வாக்காளருக்கு பணம் வழங்கப்படுவதாக கட்சிகள் புகார் அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில்  உள்ள வாக்காளர்களுக்கு இன்று காலை 4 மணி முதல் திமுகவினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும்,  இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று  குற்றம் சாட்டி கீழப்புதூரில் உசிலம்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story