எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க மத்திய அரசுடன் பேச்சு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-
தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் பல முறை சிறை சென்றவர். சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் மதுரை எய்ம்ஸில் 50 மாணவருக்கான சேர்க்கை நடந்து வருகிறது. மதுரை எய்ம்ஸில் இடம் கிடைக்கும் 50 மாணவர்களும் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பரிசோதனைகள் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறித்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story